×

முதலமைச்சரின் அறிவிப்பை தொடர்ந்து பகுதிநேர ஆசிரியர்களின் போராட்டம் ஒத்திவைப்பு

சென்னை : முதலமைச்சரின் அறிவிப்பை தொடர்ந்து பகுதிநேர ஆசிரியர்களின் போராட்டம் ஒத்திவைக்கப்பட்டது. சிறப்பு மதிப்பெண் மூலம் பகுதிநேர ஆசிரியர்கள் பணி நிரந்தரம் செய்யப்படுவர் என்று பேரவையில் முதல்வர் உறுதியளித்திருந்தார். இதையடுத்து எங்களுக்கு பாதகம் இல்லாத அரசாணை வரும் என்ற நம்பிக்கையில் போராட்டம் ஒத்திவைப்பு என பகுதிநேர ஆசிரியர்கள் அறிவித்துள்ளனர். பணி நிரந்தரம் கோரி கடந்த 17 நாட்களாக பகுதிநேர ஆசிரியர்கள் சென்னையில் போராட்டம் நடத்தி வந்தனர்.

Tags : Chief Minister ,Chennai ,
× RELATED சத்துணவு, அங்கன்வாடி...