×

தற்போது வரை தமிழ்நாட்டில் என்.டி.ஏ. கூட்டணி முழு வடிவம் பெறவில்லை : தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதா கருத்து!!

சென்னை : தற்போது வரை தமிழ்நாட்டில் என்.டி.ஏ. கூட்டணி முழு வடிவம் பெறவில்லை என்று தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதா தெரிவித்துள்ளார். சென்னையில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த அவர், “தமிழ்நாட்டு மக்களுக்கு நல்லது நடக்கும் வகையில் தேமுதிக நல்ல முடிவை அறிவிக்கும். என்.டி.ஏ.வுடன் இன்னும் பல கட்சிகள் பேசிக்கொண்டு இருக்கின்றன, இறுதியாகவில்லை என்பதுதான் உண்மை. கூட்டணி அமைக்க இன்னும் நேரம் இருக்கிறது; தேமுதிக என்ற குழந்தைக்கு ஒரு தாயாக எனது கடமையைச் செய்வேன்”, இவ்வாறு தெரிவித்தார்.

Tags : Tamil Nadu ,D. A. Coalition ,Demutika General Secretary ,Premalatha ,Chennai ,D. ,Demudika ,
× RELATED பிச்சை எடுப்பதை தடுத்தல் திருத்தச்...