ஜம்மு – காஷ்மீரில் கடும் பனிப்பொழிவு காரணமாக ஸ்ரீநகரில் தேசிய நெடுஞ்சாலைகள் மூடப்பட்டுள்ளன. பனிப்பொழிவால் சாலைகளில் குவிந்து வரும் பனிக்கட்டிகளால் முகல் சாலை, ஸ்ரீநகர் தேசிய நெடுஞ்சாலைகள் மூடப்பட்டுள்ளது. சாலைகள் சரி செய்யப்பட்டு போக்குவரத்துக்கு பாதுகாப்பானதாக அறிவிக்கப்படும் வரை பயணிகள் செல்ல வேண்டாம். முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ரஜோரி, பூஞ்ச், கதுவா மாவட்டங்களில் அனைத்து பள்ளிகளையும் மூட உத்தரவிடப்பட்டுள்ளது. இமாச்சலப் பிரதேசத்தில் ஷிம்லா, மணாலி உள்ளிட்ட இடங்களிலும் கடும் பனிப்பொழிவு ஏற்பட்டுள்ளது.
