மதுரை, ஜன. 24: மதுரை மாநகராட்சியில் நேற்று தேசிய வாக்காளர் தினம் உறுதிமொழி ஏற்பு நடந்தது.
ஒவ்வொரு ஆண்டும் ஜன. 25ம் தேதி தேசிய வாக்காளர் தினமாக கொண்டாடப்பட்டு வருகிறது. அதன் அடிப்படையில் வாக்காளர் தின உறுதிமொழி மதுரை மாநகராட்சி அறிஞர் அண்ணா மாளிகையில் துணை மேயர் நாகராஜன் தலைமையில் நேற்று அனைத்து பணியாளர்களும் உறுதிமொழி எடுத்துக் கொண்டனர்.
இதே போன்று மாநகராட்சியின் அனைத்து மண்டல அலுவலகங்களிலும் உதவி கமிஷனர்கள் முன்னிலையில் உறுதிமொழி எடுத்துக் கொள்ளப்பட்டது. இந்நிகழ்ச்சியில் துணை கமிஷனர் ஜெய்னுலாப்தீன், உதவி கமிஷனர்(பணி) அருணாச்சலம், கணக்கு அலுவலர் (பொது) பாலாஜி, கண்காணிப்பாளர்கள் ராஜ்குமார், செந்தில்குமரன், வீரபாலமுருகன், பணியாளர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
