கோவை, ஜன.24: கோவை மாநகராட்சி சார்பில் பல்வேறு திட்டங்களுக்கு நிதி திரட்டும் வகையில் கடன் பத்திரம் வெளியிட கடந்த 2024-ம் ஆண்டு மாநகராட்சி கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அதன்படி, கோவை மாநகராட்சி சார்பில் தனியார் வேலைவாய்ப்பு அடிப்படையில் கடன் பத்திரங்களை வெளியிட்டதன் மூலம் ரூ.150 கோடியே 85 லட்சம் நிதி திரட்டி உள்ளது.
என்.எஸ்.இ மின்னணு ஏல தளத்தில் ரூ.210 கோடி மதிப்புள்ள ஏலங்கள் பெறப்பட்டுள்ளன. இந்த பத்திரங்கள் மூலம் திரட்டப்படும் நிதி கோவை மாநகராட்சியின் குறிச்சி மற்றும் குனியமுத்தூர் பகுதிகளுக்கு (வார்டுகள் 87 முதல் 100 வரை) பாதாள சாக்கடை உள்ளிட்ட திட்டங்களை நிர்மாணிப்பதற்கு பயன்படுத்தப்படும் என மாநகராட்சி கமிஷனர் சிவகுரு பிரபாகரன் தெரிவித்துள்ளார்.
