×

குடியரசு தினத்தில் 489 கிராம ஊராட்சிகளிலும் கிராம சபைக்கூட்டம்

புதுக்கோட்டை, ஜன.24: குடியரசு தினத்தில் புதுக்கோட்டையில் உள்ள அனைத்து கிராம ஊராட்சிகளிலும் கிராம சபைக்கூட்டம் நடைபெற உள்ளது என மாவட்ட கலெக்டர் அருணா தகவல் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறியுள்ளதாவது: குடியரசு தினமான 26.01.2026-ம் தேதியன்று காலை 11 மணிக்கு புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள 489 கிராம ஊராட்சிகளிலும் கிராம சபைக்கூட்டம் நடைபெற உள்ளது.

இக்கூட்டத்தில், கிராம ஊராட்சி நிர்வாகம் மற்றும் பொது நிதி செலவினம், கிராம ஊராட்சியின் தணிக்கை அறிக்கை, கொசுக்கள் மூலம் பரவும் டெங்கு காய்ச்சல் தடுப்பு நடவடிக்கைகள், மக்கள் திட்டமிடல் இயக்கம் மூலம் 2026-27 ம் நிதியாண்டிற்கான கிராம வளர்ச்சித் திட்டத்திற்கு ஒப்புதல் பெறுதல், தொழிலாளர் வரவு-செலவு திட்டம், தொழிலாளர் வரவு-செலவு திட்டப் பணிகள், நலிவு நிலை குறைப்பு நிதி,

தூய்மை பாரத இயக்க (ஊரகம்) திட்டம் மற்றும் ஜல் ஜீவன் திட்டம் மற்றும் இதரப் பொருட்கள் குறித்து விவாதிக்கப்பட உள்ளன. மேற்குறிப்பிட்டுள்ள அரசின் திட்டங்கள் மற்றும் ஊராட்சியின் செயல்பாடுகள் பற்றிய விவரங்களை தெரிந்து கொண்டு பயன்பெறும் வகையில் பொதுமக்கள், மகளிர் சுய உதவிக் குழுக்களைச் சார்ந்தவர்கள், மாற்றுத் திறனாளிகள் மற்றும் தன்னார்வத் தொண்டு நிறுவனங்கள் என அனைவரும் அதிக அளவில் கலந்து கொண்டு கிராம சபைக் கூட்டத்தைச் சிறப்பிக்கக் கேட்டுக்கொள்கிறேன்.

 

Tags : Gram Sabha ,Republic Day ,Pudukottai ,District Collector ,Aruna ,Pudukottai… ,
× RELATED கல்லூரி மாணவர்களுக்கு சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு