சென்னை: தமிழக சட்டமன்றத்தில் கேள்வி நேரம் முடிந்த பின் பத்திரப்பதிவுத்துறை அமைச்சர் மூர்த்தி பேசுகையில் ‘‘அலங்கா நல்லூர் ஜல்லிக்கட்டு விழாவில் கலந்து கொண்ட முதல்வருக்கு நன்றி தெரிவித்து கொள்கிறேன். மேலும் சிறந்த ஜல்லிக்கட்டு வீரர்களுக்கு கால்நடை துறையில் அரசு பணியும் ஜல்லிக்கட்டு காளைகளுக்கு மருத்துவமனையும் அமைத்து தரப்படும் என கூறினார்.
தனியாரால் நடத்தப்படும் ஜல்லிக்கட்டுகளுக்கு ஆன்லைன் முறையை ரத்து செய்துள்ளார் இதற்காக முதல்வருக்கு ஜல்லிக்கட்டு மஞ்சுவிரட்டு வீரர்கள் சார்பாகவும் மதுரை மக்கள் சார்பாகவும் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். இவ்வாறு அவர் பேசினார்
