×

காங். கவுன்சிலர் விஷம் குடித்து தற்கொலை

கடையம்: தென்காசி மாவட்டம், தெற்கு கடையத்தை சேர்ந்தவர் மாரிகுமார் (35). காங்கிரஸ் கட்சியை சேர்ந்த இவர், கடையம் ஒன்றியம் 11வது வார்டு கவுன்சிலராக இருந்து வந்தார். பட்டதாரியான இவர் கடன் சுமை தாங்காமல் மன உளைச்சலில் இருந்துள்ளார். இந்நிலையில் நேற்று முன்தினம் கடையத்திலிருந்து புலவனூர் செல்லும் சாலையோரம் விஷம் குடித்து மயங்கி கிடந்தார். தகவல் அறிந்த உறவினர்கள், அவரை மீட்டு தென்காசி அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக நெல்லை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். அங்கு தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி நேற்று காலை மாரிகுமார் உயிரிழந்தார். இது குறித்து கடையம் போலீசார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags : Congress ,Kadayam ,Marikumar ,South Kadayam, Tenkasi district ,Congress party ,Kadayam union ,
× RELATED வடகிழக்கு பருவமழையால் சேதமடைந்த...