மேட்டூர்: சேலம் மாவட்டம், மேட்டூர் அருகே கர்நாடக மாநிலத்தில் மாதேஸ்வரன் மலை கோயிலுக்கு. நேற்று முன்தினம், தாளபெட்டா வழியாக 5 பேர் நடை பயணமாக வந்துள்ளனர். அப்போது, திடீரென சிறுத்தை தாக்கியதில், பிரவீன் என்பவர் உயிரிழந்தார். அவருடன் வந்த 4 பேர் அதிர்ஷ்டவசமாக தப்பினர். இதைத்தொடர்ந்து மாதேஸ்வரன் மலைக்கு, பக்தர்கள் நடந்து செல்லவும், பைக்கில் செல்லவும் தடை விதிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக, நேற்று காலை முதல் மேட்டூர் வழியாக கர்நாடக மாநிலம் மாதேஸ்வரன் மலைக்கு நடந்து செல்லும் பக்தர்கள், பைக்கில் வந்தவர்கள், பாலாறு சோதனை சாவடியில் தடுத்து நிறுத்தப்பட்டு திருப்பி அனுப்பப்பட்டனர்.
