மும்பை: 40 வயதிற்குட்பட்ட 436 இளம் தொழில்முனைவோர்கள் இந்தியாவின் சுமார் $950 பில்லியன் (ரூ.87 லட்சம் கோடி) மதிப்பிலான வர்த்தகத்தைக் கட்டுப்படுத்துகின்றனர் என ‘Uth Series 2025′ அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதில் 80% பேர் முதல் தலைமுறை தொழில்முனைவோர்கள் என்றும், 109 பேருடன் பெங்களூரு நாட்டின் இளம் தொழில் முனைவோரின் தலைநகராக திகழ்வதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
