- கொள்முதல்
- ஒரத்தநாடு
- முன்னாள்
- எம்.எல்.ஏ ராமச்சந்திரன்
- திமுக கிழக்கு ஒன்றியம்
- கார்த்திகேயன்
- பூவத்தூர்
- தஞ்சாவூர் மாவட்டம்
ஒரத்தநாடு, ஜன. 22: ஒரத்தநாடு அருகே பூவத்தூரில் புதிய நேரடி நெல் கொள்முதல் நிலையத்தை ஒரத்தநாடு முன்னாள் எம்எல்ஏ ராமச்சந்திரன் மற்றும் திமுக கிழக்கு ஒன்றிய செயலாளர் கார்த்திகேயன் ஆகியோர் திறந்து வைத்தனர். தஞ்சாவூர் மாவட்டம் ஒரத்தநாடு மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் சுமார் பல்லாயிரம் ஏக்கர் தாள்டி நெல் அறுவடை பணி நடைபெற்று வருகிறது.
பூவத்தூர் கிராமத்தில் விவசாயிகள் தற்போது நெல் அறுவடை செய்து வருகின்றனர். இந்நிலையில் பூவத்தூர் வடக்கு பகுதியில் தற்காலிகமாக அமைக்கப்பட்டுள்ள நேரடி நெல் கொள்முதல் நிலையத்தை ஒரத்தநாடு முன்னாள் எம்எல்ஏ ராமச்சந்திரன் மற்றும் ஒரத்தநாடு கிழக்கு ஒன்றிய செயலாளர் கார்த்திகேயன் ஆகியோர் திறந்து வைத்தனர். மேலும் நிகழ்ச்சியில் முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர்கள், முன்னாள் கவுன்சிலர்கள், விவசாயிகள் உள்ளிட்ட ஏராளமான கலந்து கொண்டனர்.
