×

பழைய கந்தர்வகோட்டை பேருந்து நிழற்குடையை சீர்செய்ய வேண்டும்

கந்தர்வகோட்டை, ஜன.22: பழைய கந்தர்வகோட்டை பேருந்து நிறுத்த நிழற்குடையை சீர்செய்ய பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டை ஊராட்சி ஒன்றியம் பழைய கந்தர்வகோட்டை ஊராட்சியில் சுமார் இரண்டாயிரம் மக்கள் வசிந்துவருகிறார்கள். இங்கு வாசிக்கும் மக்கள் தங்களது தேவைக்கு கந்தர்வகோட்டை அல்லது தஞ்சைக்கு செல்லவேண்டிய சூழ்நிலை உள்ளது.

இந்த பேருந்து நிறுத்தத்தில் நகர பேருந்துகள் மட்டுமே நின்று செல்லும். பொதுமக்களும், பள்ளி, கல்லூரி மாணவ- மாணவிகள் பேருந்துக்கு இங்கு அமைந்து உள்ள பயணிகள் நிழற்குடையில் இருந்துதான் பயணம் செய்ய வேண்டும். அனால் இங்கு உள்ள பயணிகள் நிழற்குடை பழுது அடைந்து இருக்கைகள் சேதரமாகியும் மேலும் தேவையற்ற புல் பூண்டுகள், செடிகள் வளர்ந்து உள்ளது.

இதனால் மக்கள் இந்த நிழற்குடையை பயன்படுத்துவது குறைந்துவருகிறது. சாலையோரத்தில் வெயில், மழையில் நின்று பேருந்துக்கு காத்திருக்கும் நிலை உள்ளது. எனவே மக்கள் நலனை கருத்தில் கொண்டு சம்பந்தபட்ட துறையினர் பழைய கந்தர்வகோட்டை பேருந்து நிறுத்த நிழற்குடையை சீர்செய்து தரும்படி பயணிகள் சம்பந்தபட்ட துறையினருக்கு கோரிக்கை வைக்கிறார்கள்.

 

Tags : Kandarvakottai ,Kandarvakottai panchayat ,Kandarvakottai district ,
× RELATED கல்லூரி மாணவர்களுக்கு சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு