- பாஜா கூட்டணி
- சென்னை
- தேசிய ஜனநாயக கூட்டணி
- தமிழ்
- தமிழ்நாடு
- காங்கிரஸ்
- ஜனாதிபதி
- செல்வாப்பெருந்தகை
- சத்யமுர்த்திபவன்
- தமிழ்நாடு: உச்ச நீதிமன்றம்
சென்னை: தேசிய ஜனநாயக கூட்டணி ஒரு மூழ்கும் கப்பல், தமிழக மக்கள் ஒருபோதும் அவர்களை ஏற்கமாட்டார்கள் என்று செல்வப்பெருந்தகை கூறியுள்ளார். தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை சத்தியமூர்த்திபவனில் நேற்று நிருபர்களிடம் கூறியதாவது: அதிமுக, பாஜவின் தேசிய ஜனநாயக கூட்டணியை தமிழக மக்கள் புறக்கணிப்பார்கள். இந்த கூட்டணி தமிழக மக்களின் நலனுக்கு எதிரான கூட்டணி. தமிழக மக்களுக்கு எதிராக திட்டம் தீட்டி வருகின்ற ஒன்றிய பாஜ அரசையும், அதிமுகவையும் மக்கள் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள்.
அவர்கள் எவ்வளவு பெரிய படையை திரட்டினாலும், எத்தனை கட்சிகள் ஒன்று சேர்ந்தாலும், தமிழக மக்களால் நிராகரிக்கப்பட்ட கட்சிகள் என்பதுதான் உண்மை. அதிமுக – பாஜகவுடன் யாரெல்லாம் சேர்கிறார்களோ, அவர்கள் எல்லாம் மூழ்கும் கப்பலில் ஏறி பயணம் செய்கிறவர்கள். அதிமுக – பாஜ மூழ்கும் கப்பலாக இருக்கிறது. இந்திய தேசிய வளர்ச்சியை உள்ளடக்கிய இந்தியா கூட்டணி மேலும் வலிமை பெறும். புதிய கட்சிகள் அதில் இணைவதற்கான வாய்ப்புகள் இருக்கின்றன. என்.டி.ஏ கூட்டணி ஒரு பொருந்தா கூட்டணி மற்றும் இயற்கைக்கு எதிரான கூட்டணி. இந்த கூட்டணியை தமிழக மக்கள் நிச்சயமாக நிராகரிப்பார்கள்.இவ்வாறு அவர் கூறினார்.
