×

அதிமுக எம்எல்ஏக்கள் எண்ணிக்கை 62ஆக குறைந்தது

சென்னை: அதிமுக எம்எல்ஏக்கள் பலம் 62ஆக குறைந்துள்ளது. 2021ம் ஆண்டு நடந்த சட்டமன்ற தேர்தலில் இரட்டை இலை சின்னத்தில் போட்டியிட்ட 66 அதிமுக எம்எல்ஏக்கள் வெற்றி பெற்றனர். இந்த நிலையில், அதிமுக பொதுச்செயலாளரின் நடவடிக்கை பிடிக்காமல் ஓபிஎஸ் அணியின் தீவிர ஆதரவாளரான மனோஜ் பாண்டியன் கடந்த நவம்பர் மாதம் அதிமுகவில் இருந்து விலகி முதல்வர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் திமுகவில் இணைந்தார். முன்னதாக தனது எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்தார். இதையடுத்து அதிமுகவின் மூத்த தலைவர்களில் ஒருவரான கே.ஏ.செங்கோட்டையன் கடந்த நவம்பர் இறுதியில் தனது எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்துவிட்டு, தமிழக வெற்றி கழகத்தில் இணைந்தார்.

இந்நிலையில், முன்னாள் அமைச்சர் வைத்திலிங்கம் நேற்று தனது எம்.எல்.ஏ பதவியை ராஜினாமா செய்துவிட்டு முதல்வர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் திமுகவில் இணைந்தார். கடந்த ஆண்டு ஜூன் 21ம் தேதி உடல்நல குறைவால் வால்பாறை அதிமுக எம்எல்ஏ அமுல் கந்தசாமி காலமானார். இதனால், அதிமுகவின் சட்டமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கை 66ல் இருந்து 62 ஆகக் குறைந்துள்ளது. 2021 சட்டமன்ற தேர்தலில் இரட்டை இலை சின்னத்தில் போட்டியிட்ட ஓ.பன்னீர்செல்வம் அவரது ஆதரவு எம்எல்ஏ ஐயப்பன் ஆகியோர் தனியாக செயல்பட்டு வருகின்றனர். அவர்களும் விரைவில் எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்துவிட்டு அதிமுகவில் இருந்து விலக திட்டமிட்டுள்ளனர்.

Tags : Chennai ,2021 assembly elections ,OPS ,
× RELATED சொல்லிட்டாங்க…