நன்றி குங்குமம் தோழி
பெண்களுக்கு தலைமுடி
கொட்டுவது மிகவும் வருந்தத்தக்க விஷயமாகும். அதை தடுக்க சில எளிய வழிமுறைகள்.
*கசகசாவை பாலில் ஊறவைத்து அரைத்து அத்துடன் பாசிப்பருப்பு மாவை கலந்து முடியில் தேய்த்து, ஊறவைத்து குளித்து வந்தால் முடி உதிர்தல் நிற்கும்.
*கற்றாழை சாறில் தேங்காய் எண்ணெயை கலந்து முடியில் தேய்த்தால் முடி உதிராது. அடர்த்தியாக நன்றாக வளரும். அத்துடன் தலையும் குளிர்ச்சியாகும்.
*சின்ன வெங்காயத்தை சாறு எடுத்து தலையில் தேய்த்து ஊறவைத்து குளித்து வந்தால் முடி உதிராது. நன்றாக அடர்த்தியாகவும் வளரும்.
*செம்பருத்திப் பூவுடன் தேங்காய் எண்ணெயை கலந்து தலையில் தேய்த்தால் முடி உதிராது. மேலும் கூந்தல் கருமையாகவும் மாறும்.
*முட்டையின் வெள்ளை கருவை மட்டும் எடுத்து, தலையில் தேய்த்து பத்து நிமிடங்கள் ஊறவைத்து, பின்பு சீயக்காய் போட்டுக் குளித்தால் தலைமுடி உதிர்வது நின்று விடும்.
*வாரம் ஒருமுறை முடக்கத்தான் கீரையை அரைத்து, தலையில் தேய்த்து, ஐந்து நிமிடங்கள் ஊறவைத்து பின்பு தலைமுடியை அலசினால் முடி உதிர்வது நிற்கும். இது போல் தொடர்ந்து மூன்று மாத காலம் குளித்தல் வேண்டும். முடி கொட்டுவது நிற்கும். மேலும் நரை விழுவதையும் தடுக்கும். முடியும் கருகருவென வளரும்.நடைமுறைப்படுத்துங்கள்… எழிலான தலைமுடியுடன் வலம் வாருங்கள்.
தொகுப்பு: கே.சித்ரா, சென்னை.
