டெல்லி: ஒன்றிய அரசு அதிகாரிகள் மீதான ஊழல் வழக்குகளை மாநில காவல்துறை விசாரிக்க அதிகாரம் உள்ளது என உச்ச நீதிமன்றம் கூறியுள்ளது. ஊழல் குற்றச்சாட்டுக்கு ஆளாகும் ஒன்றிய அரசு ஊழியர்கள் மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய, ஊழல் வழக்கு பதிய சிபிஐயின் முன் அனுமதி தேவையில்லை என உச்ச நீதிமன்ற நீதிபதிகள் பர்திவாலா, சதீஷ் சந்திர சர்மா அமர்வு அதிரடி தீர்ப்பு அளித்துள்ளது. தன்னை சிபிஐ மட்டுமே விசாரிக்க முடியும் என்று ஊழல் புகாருக்கு ஆளான ஒன்றிய அரசு ஊழியர் தொடர்ந்த வழக்கில் தீர்ப்பு அளிக்கப்பட்டது.
