- ஊட்டச்சத்து உணவு
- நாமக்கல்
- சத்துணவு உணவு பணியாளர்கள் சங்கம்
- தமிழ்நாடு சத்துணவு உணவு பணியாளர்கள் சங்கம்
- கோமதி
நாமக்கல், ஜன.21: நாமக்கல்லில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட சத்துணவு ஊழியர் சங்கத்தினர் 270 பேரை போலீசார் கைது செய்தனர். நாமக்கல்லில் தமிழ்நாடு சத்துணவு ஊழியர்கள் சங்கத்தினர், நேற்று மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். மாவட்ட தலைவர் கோமதி தலைமை வகித்தார். சத்துணவு ஊழியர்களுக்கு காலமுறை ஊதியம், குடும்ப பாதுகாப்புடன் கூடிய ஓய்வூதியம், பணிக்கொடை அமைப்பாளர்களுக்கு ரூ.5 லட்சம், சமையல் உதவியாளர்களுக்கு ரூ.3 லட்சம் வழங்கவேண்டும் போன்ற கோரிக்கையை வலியுறுத்தி இந்த மறியல் போராட்டம் நடைபெற்றது. கோரிக்கையை வலியுறுத்தி கோஷமிட்ட சத்துணவு ஊழியர்கள் பின்னர், பிரதான சாலையில் அமர்ந்து சாலை மறியலில் ஈடுபட்டனர். போராட்டத்தில் ஈடுபட்ட 270 பேரை போலீசார் கைது செய்து தனியார் திருமண மண்டபத்தில் தங்க வைத்தனர். பின்னர் அனைவரும் மாலையில் விடுவிக்கப்பட்டனர்.
