×

நானும் ரவுடிதான்னு சவுண்டு விடும் இபிஎஸ்: கருணாஸ் கலாய்

சிவகங்கை: சிவகங்கை அருகே நாட்டாகுடியில் கிராம மக்களை முக்குலத்தோர் புலிப்படை நிறுவனர் நடிகர் கருணாஸ் சந்தித்தார். பின்னர் அவர், செய்தியாளர்களிடம் கூறியதாவது: கரூர் சம்பவத்தில் 41 பேர் உயிரிழந்த விவகாரத்தில், நடிகர் விஜய் இதுவரை வருத்தம் தெரிவிக்காதது மனிதத்தன்மையற்ற செயல். சிபிஐ விசாரணை முழுமையாக வெளியே வரும்போதுதான் உண்மை நிலவரம் தெரியவரும். சென்சார் போர்டின் செயல்பாடுகள் பாஜவின் அஜண்டாக்களில் ஒன்றாகவே இருக்கிறது. ஜனநாயகன் பட விவகாரம் தொடர்பாக விஜய் தான் தெளிவுப்படுத்த வேண்டும். டப்பிங்கிற்கு மட்டும் தான் குரல் கொடுப்பேன் என இருப்பது தவறு.

சட்டமன்றத்தில் இருந்து அதிமுக வெளி நடப்பு செய்தது கேலிக்கூத்து. அதிமுகவின் தேர்தல் அறிக்கை வெறும் அறிக்கை மட்டுமே. அது பழைய சுரைக்காய். அக்கட்சி தனது வாக்கு வங்கியை முழுமையாக இழந்து விட்டது. வடிவேலு பாணியில் ‘நானும் ரவுடிதான்’ என்பது போல அவ்வப்போது எடப்பாடி அறிக்கை விட்டுக் கொண்டிருக்கிறார். எடப்பாடி பழனிசாமி வேஸ்ட்.

ஜெயலலிதா அம்மா என்றால், எடப்பாடி பழனிசாமி சும்மா. ஆளுநர் திட்டமிட்டு தமிழக வளர்ச்சியை தடுத்து, மக்களுக்கான திட்டங்களை முடக்குகிறார். பாஜ, ஆர்எஸ்எஸ் சங் பரிவார்களிடம் இருந்து தமிழகத்தை காக்கும் ஒரே தலைவராக முதல்வர் முக.ஸ்டாலின் திகழ்கிறார். வரும் தேர்தலில் திமுக கூட்டணிக்கு ஆதரவாக பிரசாரம் செய்வேன். போட்டியிட வாய்ப்பளித்தால் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட தயாராக உள்ளேன். இவ்வாறு கூறினார்.

Tags : EPS ,Karunas Kalai ,Sivaganga ,Karunas ,Mukulathor Tiger Force ,Nattakudi ,Vijay ,Karur ,CBI… ,
× RELATED சாதனைகளை மக்களிடையே கொண்டு சேர்க்க...