×

காங்கிரஸ் கட்சியில் விருப்ப மனு அளிப்பதற்கான கால அவகாசம் நீட்டிப்பு

 

சென்னை: காங்கிரஸ் கட்சியில் விருப்ப மனு அளிப்பதற்கான கால அவகாசம் நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது. இது தொடர்பாக தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி வெளியிட்டுள்ள அறிக்கையில்; 2026 ஆம் ஆண்டு நடைபெறவுள்ள தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியின் சார்பில் போட்டியிட விரும்பும் காங்கிரஸ் கட்சியின் உறுப்பினர்களிடமிருந்து 234 சட்டமன்றத் தொகுதிகளுக்கும் கட்டணமில்லா விருப்ப மனுக்கள் 15.12.2025 வரை பெறப்படும் என்று அறிவிக்கப்பட்டது. இதுவரை ஐந்தாயிரத்து நானூற்றுக்கும் மேற்பட்டோர் விருப்ப மனுக்களை உற்சாகத்துடன் அளித்துள்ளனர். மேலும், காங்கிரஸ் கட்சியினரின் வேண்டுகோளுக்கிணங்க, வருகிற (30.1.2026) ஜனவரி மாதம் 30 ஆம் தேதி வரை விருப்ப மனுக்கள் பெறுவது நீட்டிக்கப்பட்டுள்ளது என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

Tags : Congress party ,Chennai ,Tamil Nadu Congress Committee ,National Congress Party of India ,NCP ,Indian National Congress Party ,Tamil Nadu Assembly ,
× RELATED சென்னை அண்ணா அறிவாலயத்தில் திமுக...