×

ஒன்றிய அரசின் பிரதிநிதியாக இருக்க வேண்டிய ஆளுநர் ரவி, பாஜகவின் பிரதிநிதியாக செயல்படுகிறார்: ஆர்.எஸ்.பாரதி கண்டனம்

 

சென்னை: ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி கண்டனம் தெரிவித்துள்ளார். ஆளுநர் சட்டமன்றத்தை விட்டு வெளியேறிய சில நிமிடத்தில் லோக் பவன் செய்திக்குறிப்பு வெளியிட்டது. ஆளுநர் வெளியேறிய சில நிமிடங்களில் செய்திக்குறிப்பு என்றால் முந்தைய நாளே ஸ்கிரிப்ட் வந்துவிட்டதா? பிரதமர் பங்கேற்ற விழாவிலேயே தேசிய கீதம் மறுக்கப்பட்ட போது ஆளுநர் ரவியின் இதயம் ஏன் துடிக்கவில்லை? ஒன்றிய அரசின் பிரதிநிதியாக இருக்க வேண்டிய ஆளுநர் ரவி, பாஜகவின் பிரதிநிதியாக செயல்படுகிறார். மாநில அரசின் உரையைத்தான் ஆளுநர்கள் படிக்க வேண்டும் என்பது அரசியலமைப்பு கடமைதான். அரசியலமைப்பு பற்றி எல்லாம் பாடம் எடுக்க ஆளுநருக்கு தகுதி இல்லை என்றும் கூறினார்.

Tags : Governor ,Ravi ,Union State ,BJP ,R. S. Bharati ,Chennai ,R. N. RAVIKU DIMUKA ,Lok Bhavan ,
× RELATED நாளை பாஜக உயர்மட்ட குழு ஆலோசனை