அரசு அலுவலகங்களில் குடியரசு தின விழா

ஓசூர், ஜன.28: ஓசூரில் 72வது குடியரசு தின விழா நேற்று கொண்டாடப்பட்டது. ஓசூர் சப் கலெக்டர் அலுவலகத்தில் நடந்த விழாவில், ஆர்டிஓ குணசேகரன் தேசிய கொடியை ஏற்றி வைத்து மரியாதை செலுத்தினார். தேசிய வாக்காளர் தினத்தையொட்டி, வாக்களித்தல் நமது உரிமை என்ற தலைப்பில் ஓவியப்போட்டி நடத்தப்பட்டது. இதில் 20க்கும் மேற்பட்ட மாணவர்கள் பங்கேற்றனர். போட்டியில் வெற்றி பெற்ற 3 பேருக்கு கேடயங்கள் வழங்கப்பட்டது. நிகழ்ச்சியில் தாசில்தார் செந்தில்குமார், நேர்முக உதவியாளர் ரமேஷ், வருவாய் ஆய்வாளர்கள், கிராம நிர்வாக அலுவலர்கள், ஓவிய ஆசிரியர் ஜோதிலிங்கம் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

ஓசூர் மாநகராட்சி அலுவலகத்தில், மாநகராட்சி ஆணையாளர் செந்தில்முருகன் தேசிய கொடியை ஏற்றி வைத்து மரியாதை செலுத்தினார்.  நகராட்சி பொறியாளர்கள், நகராட்சி அலுவலர்கள், பணியாளர்கள் கலந்து கொண்டனர். ஓசூர் வட்டார வளர்ச்சி அலுவலகத்தில், பிடிஓக்கள் ஆப்தாப்பேகம், ராமசந்திரன், தலைவர் சசிவெங்கடசாமி, துணை தலைவர் நாராயணசாமி மற்றும் பலர் கலந்து கொண்டனர். ஓசூர் டிஎஸ்பி அலுவலகத்தில், டிஎஸ்பி முரளி தேசிய கொடியை ஏற்றி வைத்து மரியாதை செலுத்தினார். இதில் இன்ஸ்பெக்டர்கள், டிஎஸ்பி அலுவலக ஊழியர்கள், போலீசார் கலந்து கொண்டனர். இதேபோல், தனியார் பள்ளிகள், குடியிருப்பு பகுதிகள், தொழிற்சாலைகள், அரசு அலுவலகங்களில் குடியரசு தின விழா கொண்டாடப்பட்டு இனிப்புகள் வழங்கப்பட்டன.

Related Stories: