×

செவ்வாழை சாகுபடி பரப்பு அதிகரிக்கப்படுமா?

 

தேவாரம், ஜன.20: தேவாரம் பகுதியில், செவ்வாழை சாகுபடியை அதிகரிக்க வேளாண் துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
உத்தமபாளையம் வட்டாரத்தில் கோம்பை, பண்ணைப்புரம், தேவாரம், போடி பகுதிகளில் சுமார் ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் வாழை சாகுபடி நடந்து வந்தது. இதில் பண்ணைப்புரம் பகுதியில் அதிக ஏக்கர் பரப்பளவில் வாழை விவசாயம் நடந்து வந்தது. இடைக்காலங்களில் குறிப்பாக கடந்த 15 வருடம் முன்பு மழை இல்லாத நிலையில், கண்மாய்கள், குளங்கள் வற்றியதால் வாழை சாகுபடி பரப்பு குறைந்து விட்டது. இந்த வருடம் பருவமழை, முன்கூட்டியே பெய்து, விளைச்சல் அதிகம் கிடைக்கும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் தற்போது மழை இல்லை. இதனால் விவசாயிகள் கவலை அடைந்தனர். இது குறித்து விவசாயிகள் கூறுகையில், போதிய மழையில்லாதால் வாழை சாகுபடி குறைந்து வருகிறது. மேலும் விவசாயிகளிடையே வாழை சாகுபடியில் ஆர்வம் குறைந்து வருகிறது. எனவே இதன் சாகுபடியை அதிகரிக்க வேளாண் துறையினர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags : Thevaram ,Gombai ,Pannapuram ,Bodi ,Uttampalayam ,
× RELATED குப்பை கொட்டிய வாகனத்திற்கு ரூ.8000 அபராதம்