×

மின்சாரம் தாக்கி பெண் சாவு

 

பரமக்குடி, ஜன.20: ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி அருகே அரியனேந்தல் பூங்கா நகர் பகுதியைச் சேர்ந்தவர் பூமி. இவரது மனைவி சண்முகவள்ளி(50). இவர் நேற்று முன்தினம் மாலை அரியனேந்தல் கிராம வயல் வெளியில் ஆடு மேய்க்கும் பணியில் ஈடுபட்டிருந்தார். அப்போது, கீழே அறுந்து கிடந்த உயரழுத்த மின் கம்பியை எதிர்பாராத விதமாக மிதித்தபோது மின்சாரம் தாக்கி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இது குறித்து பரமக்குடி தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். சண்முகவள்ளி சடலம் மீட்கப்பட்டு பிரேத பரிசோதனைக்காக பரமக்குடி அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டது.

Tags : Paramakudi ,Bhumi ,Ariyanendal Pungka Nagar ,Ramanathapuram district ,Shanmugavalli ,Ariyanendal ,
× RELATED குப்பை கொட்டிய வாகனத்திற்கு ரூ.8000 அபராதம்