×

விஷம் குடித்து முதியவர் தற்கொலை

 

தேவதானப்பட்டி, ஜன. 20: தேவதானப்பட்டி அருகே கெங்குவார்பட்டி வடக்குதெருவைச் சேர்ந்தவர் செல்வம்(65). இவரது மகன் கடந்த 6மாதங்களுக்கு முன் இறந்துவிட்டார். இந்நிலையில் செல்வம் மகன் இறந்த துக்கத்தில் இருந்து வந்துள்ளார். நேற்று காலை வீட்டில் யாரும் இல்லாதபோது பூச்சி மருந்தை குடித்து மயங்கிய நிலையில் இருந்துள்ளார். அருகில் இருந்தவர்கள் அவரை மீட்டு சிகிச்சைக்காக பெரியகுளம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். சிகிச்சையில் இருந்த செல்வம் சிறிது நேரத்தில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இது குறித்து புகாரில் தேவதானப்பட்டி போலீசார் விசாரித்து வருகின்றனர்.

Tags : Devadanapati ,Richam ,Kenguvarpatty North Street ,Devdanapatti ,
× RELATED குப்பை கொட்டிய வாகனத்திற்கு ரூ.8000 அபராதம்