சிங்கம்புணரி, ஜன.20: சிங்கம்புணரி திண்டுக்கல் சாலையில் ஏராளமான இரும்பு, ஹார்டுவேர் கடைகள் மற்றும் ஹோட்டல், ரெடிமேட் உள்ளிட்ட பல்வேறு கடைகள் உள்ளது. இந்நிலையில் திண்டுக்கல் சாலை நீதிமன்றம் எதிர்புறம் இரும்பு கடை உள்ளது. இதன் உரிமையாளர் நேற்று கடையை திறந்து உள்ளே பார்த்தபோது பின்புற கதவு பூட்டு உடைக்கப்பட்டு இருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தார். உடனே சிங்கம்புணரி காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தார். அதன் பேரில் அங்கு வந்து போலீசார் ஆய்வு நடத்தினர். அப்போது கடையின் வெளிப்பகுதியில் ஒரு நபர் உள்ளே செல்லும் அளவிற்கு தகரத்தை அறுத்து உள்ளே நுழைந்து ரூ.2,500 பணத்தை எடுத்துக்கொண்டு கதவை உடைத்து வெளியே சென்றது சிசிடிவியில் பதிவாகியிருந்தது. அதேபோன்று திண்டுக்கல் சாலை உள்ள மற்றொரு இரும்பு கடையின் வெளிப்பகுதியில் உள்ள தகரத்தை அறுத்து மர்ம நபர் உள்ளே சென்று ரூ28, 000 ஆயிரம் பணத்தை திருடி சென்றதும் தெரியவந்தது. இது குறித்து சிங்கம்புணரி போலீசார் வழக்கு பதிந்து சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில் பணத்தை திருடிச் சென்ற மர்ம நபரை தேடி வருகின்றனர்.

