×

பாலத்தில் வேன் மோதி 3 பேர் பலி 8 பேர் காயம்

விருதுநகர்: கோவை மாவட்டம், பொள்ளாச்சியை சேர்ந்தவர் நாடாளும்பெருமாள். முறுக்கு கம்பெனி நடத்தி வருகிறார். இவர் பொங்கல் பண்டிகைக்காக சொந்த ஊரான தூத்துக்குடி மாவட்டம், நாசரேத் அருகே சின்னமாடன் குடியிருப்புக்கு குடும்பத்துடன் சென்றார். பண்டிகை முடிந்து சரக்கு வேனில் நேற்று மீண்டும் பொள்ளாச்சிக்கு புறப்பட்டனர். வேனை நாடாளும்பெருமாளின் மகன் வெங்கடேஷ் (19) ஓட்டினார். விருதுநகர் அருகே ஆர்ஆர் நகர், நான்குவழிச் சாலை பாலத்தில் வேன் ஏறியபோது கட்டுப்பாட்டை இழந்து பக்கவாட்டு சுவரில் மோதியது. இதில் தூக்கி வீசப்பட்ட வெங்கடேஷின் பாட்டி ராமக்கன்னி என்ற நாகக்கனி, கலையரசி, வெங்கடா ராமமூர்த்தி ஆகியோர் உயிரிழந்தனர். மேலும் 8 பேர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.

Tags : Virudhunagar ,Pollachi, Coimbatore district ,Chinnamadan ,Nazareth, Thoothukudi district ,Pongal festival ,Pollachi ,
× RELATED பரபரப்பான அரசியல் சூழ்நிலையில் தமிழக...