×

தீ பரவட்டும் என்று சொன்னால் பயப்படுகிறார்கள்: துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் பேச்சு

 

சென்னை: தீ பரவட்டும் என்று சொன்னால் பயப்படுகிறார்கள் என துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார். சென்னை புத்தகக் காட்சியில் 2026ம் ஆண்டுக்கான ‘பபாசி’ விருதுகளை துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் இன்று வழங்கினார். பின்னர் நிகழ்ச்சியில் உரையாற்றிய அவர்; சென்னையில் 49 ஆண்டுகளாக தொடர்ந்து நடைபெற்று வரும் சென்னை புத்தகக் காட்சி, பொன்விழாவைத் தொடவிருக்கிறது. அதற்கு எங்கள் வாழ்த்துகள். நானும் ஒரு பதிப்பாளராக இங்கு பங்கேற்பதில் பெருமை அடைகிறேன்.

திமுக இளைஞர் அணி சார்பில் நடத்தப்படும் முத்தமிழறிஞர் பதிப்பகத்தின் மூலம் இவ்வாண்டு 25 புத்தகங்கள் வெளியிடப்பட்டுள்ளன. அதற்கு களம் அமைத்துக் கொடுத்த சென்னை புத்தகக் காட்சிக்கு நன்றி. சென்னையின் மிக முக்கியமான அடையாளமாக மாறியிருக்கிறது சென்னை புத்தகக் காட்சி. ஒருபக்கம் சென்னை புத்தகக் காட்சி, மறுபக்கம் பன்னாட்டு புத்தகத் திருவிழா என திராவிட மாடல் அரசு நடத்தி வருகிறது. இதன் மூலம் இந்தியாவின் பதிப்பகத் தலைநகராக தமிழ்நாடு திகழ்கிறது. சென்னையின் மிக முக்கியமான அடையாளமாக மாறியிருக்கிறது சென்னை புத்தகக் காட்சி.

விடுமுறைக் காலங்களில் கடற்கரை போன்ற பொழுதுபோக்கு இடங்களுக்கு மக்கள் செல்வதைவிட, புத்தகக் காட்சிக்கு வருவதைப் பார்க்கும் போது மகிழ்ச்சியாக உள்ளது. இந்தியாவின் முன்னணி அறிவுச் சுரங்கமாக தமிழ்ச் சமூகம் திகழ்கிறது. அதற்குக் காரணம், தமிழ்ச் சமூகம் வாசிப்பை ஒருபோதும் கைவிடாததே.” “அறிஞர் அண்ணா உலக வரலாற்று தலைவர்களின் கருத்துகளை கடிதமாக எழுதினார். அவர் அன்று பற்ற வைத்த அறிவுத்தீ இன்றும் எரிந்து கொண்டிருக்கிறது. அதனால்தான் ‘தீ பரவட்டும்’ என்று சொன்னால் இன்று கூட பலர் பயந்து நடுங்குகின்றனர்.

திராவிட இயக்கம் பேசியும், எழுதியும், படித்தும் வளர்ந்த இயக்கம். 100-க்கும் அதிகமான பத்திரிகைகளை நடத்திய இயக்கமாக திராவிட இயக்கம் திகழ்கிறது. எழுத்தை வெறும் பிரசாரத்திற்கான கருவியாக மட்டுமின்றி, மக்களிடையே பகுத்தறிவையும், முற்போக்கு கருத்துகளையும் கொண்டு செல்லும் சக்திவாய்ந்த ஊடகமாக பயன்படுத்திய இயக்கமே திராவிட இயக்கம். திராவிட மாடல் அரசு பதிப்பாளர்களுக்கும், படைப்பாளர்களுக்கும், விற்பனையாளர்களுக்கும் என்றென்றும் துணையாக இருக்கும்.

திராவிட இயக்கம் புத்தகங்களை, எழுத்தாளர்களை, பதிப்பாளர்களை என்றும் கொண்டாடும். அதனால்தான் தனது சொந்த நிதியிலிருந்து ரூ.1 கோடியை முத்தமிழறிஞர் கலைஞர் அறிவித்தார். அவரது வழியில் திராவிட மாடல் அரசு வாசிப்பை ஊக்குவிக்க பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. சென்னை புத்தகக் கண்காட்சியை நடத்த ரூ.75 லட்சம் ஊக்கத் தொகை வழங்கியுள்ளது. தமிழ்நாடு முழுவதுவதும் புத்தகக் காட்சி நடத்தப்பட்டு வருகிறது என்று கூறினார்.

Tags : Deputy Chief Assistant Secretary ,Stalin ,Chennai ,Deputy Chief Minister ,Udayaniti Stalin ,Udayanidhi Stalin ,Babasi Awards ,Chennai Book Fair ,
× RELATED பரபரப்பான அரசியல் சூழ்நிலையில் தமிழக...