கரூர் நெரிசல் வழக்கு விசாரணைக்காக டெல்லி சிபிஐ அலுவலகத்தில் தவெக தலைவர் விஜய் ஆஜர்

டெல்லி: கரூர் பிரச்சார கூட்டத்தில் ஏற்பட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்தது தொடர்பான விசாரணைக்கு டெல்லி சிபிஐ அலுவலகத்தில் தவெக தலைவர் விஜய் ஆஜரானார். விஜயுடன் அவரது அரசியல் ஆலோசகர் ஜான் ஆரோக்கியசாமியும் சிபிஐ முன் ஆஜராகியுள்ளார்.

கரூரில் 41 பேர் உயிரிழப்பு சம்பவம் வழக்கு தொடர்பாக சிபிஐ விசாரணை நடத்தி வருகிறது. இவ்வழக்கில் தவெக தலைவரும் நடிகருமான விஜய்க்கு சிபிஐ சம்மன் அனுப்பி, கடந்த 12ம் தேதி டெல்லியில் விசாரணை நடத்தியது. இவ்விசாரணையில் பங்கேற்க, அன்றைய தினம் சென்னையில் இருந்து தனி விமானத்தில் நடிகர் விஜய் புறப்பட்டு சென்றார். அங்கு சிபிஐ அலுவலகத்தில் 7 மணி நேர விசாரணையில் பங்கேற்று, அதற்கான பதில்களை எழுத்துபூர்வமாக அளித்துள்ளார். மறுநாளும் சிபிஐ விசாரணை தொடர வேண்டிய நிலையில், பொங்கல் பண்டிகைக்கு பிறகு அடுத்தகட்ட விசாரணை நடத்தும்படி தவெக சார்பில் கோரிக்கை விடுக்கப்பட்டது.

இக்கோரிக்கையை சிபிஐ ஏற்றுக்கொண்டு, நாங்கள் மீண்டும் சம்மன் அனுப்பும்போது விசாரணைக்கு ஆஜராக வேண்டும் என்று தவெக தலைவர் விஜய்யிடம் கூறி அனுப்பிவைத்தனர். இந்நிலையில், டெல்லி சிபிஐ அலுவலகத்தில் இன்று(19ம் தேதி) நடைபெறும் விசாரணைக்கு ஆஜராகும்படி தவெக தலைவர் விஜய்க்கு சம்மன் அனுப்பப்பட்டது. அதன்படி, டெல்லியில் நடைபெறும் சிபிஐ விசாரணையில் ஆஜராக நடிகர் விஜய் இன்று ஆஜராகியுள்ளார்.

Related Stories: