×

இதுவரை 2.15 கோடி பேருக்கு வழங்கல் விடுபட்டவர்களுக்கு இன்று முதல் பொங்கல் பரிசு வினியோகம்

சென்னை: தமிழ்நாடு முழுவதும் இதுவரை 2.15 கோடி பேருக்கு பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கப்பட்டுள்ளது. விடுபட்டவர்களுக்கு இன்று முதல் பொங்கல் பரிசு தொகுப்பை பெற்று கொள்ளலாம் என்று கூட்டுறவுத்துறை அறிவித்துள்ளது. தமிழ்நாடு முழுவதும் 24,924 நியாயவிலைக்கடைகளில் 2 கோடியே 22 லட்சத்து 91 ஆயிரத்து 710 அரிசி பெறும் குடும்ப அட்டைதாரர்கள், இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாம்களில் வசிக்கும் குடும்பத்தினருக்கு பொங்கல் பரிசுத்தொகுப்பு வழங்கும் பணி முழுவீச்சில் நடைபெற்று வந்தது. இதற்காக சுமார் 50,000க்கும் மேற்பட்ட கூட்டுறவுத்துறை பணியாளர்கள் பணியில் ஈடுபடுத்தப்பட்டனர்.

அதன்படி இதுவரை 2.15 கோடி அரிசி பெறும் குடும்ப அட்டைதாரர்கள், இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாம்களில் வசிக்கும் குடும்பத்தினருக்கு ரூ.6453.54 கோடி ரொக்கம் வினியோகிக்கப்பட்டுள்ளது. அதாவது குறுகிய நாட்களுக்குள் 97% பணிகள் நிறைவு பெற்றுள்ளது. மேலும், மீதமுள்ள பயனாளிகளுக்கு பொங்கல் பரிசுத்தொகுப்பு வழங்கும் பணி இன்று முதல் வழங்கப்படுகிறது. விடுபட்ட குடும்ப அட்டைதாரர்கள் பொங்கல் பரிசு தொகுப்பினை பெற்று பயன்பெறலாம் என்று தமிழக அரசின் கூட்டுறவுத்துறை அறிவித்துள்ளது.

Tags : Chennai ,Tamil Nadu ,Cooperative Department ,Tamil Nadu… ,
× RELATED பொங்கல் விடுமுறை முடிந்து சென்னைக்கு படையெடுத்து நிற்கும் வாகனங்கள் !