- முதல் அமைச்சர்
- எம்.கே. ஸ்டாலின்
- காஞ்சிபுரம்
- துணை முதலமைச்சர்
- உதயநிதி
- திருவோத்ரியூர்
- சென்னை
- மொழி போர்
- தமிழ்நாடு: உச்ச நீதிமன்றம்
சென்னை: வரும் 25ம் தேதி மொழிப்போர் தியாகிகளுக்கு வீரவணக்க நாள் பொதுக்கூட்டம் நடக்கிறது. முதல்வர் மு.க.ஸ்டாலின் காஞ்சிபுரம் பொதுக்கூட்டத்தில் பேசுகிறார். திருவொற்றியூரில் துணை முதல்வர் உதயநிதி பங்கேற்கிறார். காஞ்சிபுரத்தில் நடைபெறும் பொதுக்கூட்டத்தில் தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டு உரையாற்றுகிறார். இதில் க.சுந்தர் எம்.எல்.ஏ., கலந்து கொள்கிறார். சைதாப்பேட்டை-பொதுச்செயலாளர் துரைமுருகன், எஸ்.ஜெகத்ரட்சகன் எம்.பி., மா.சுப்பிரமணியன், நே.சிற்றரசு, மயிலை த.வேலு. தாம்பரம்-பொருளாளர் டி.ஆர்.பாலு, எம்.பி., தா.மோ.அன்பரசன், எஸ்.ஆர்.ராஜா, எம்.எல்.ஏ., நெய்வேலி இரா.தமிழரசன் நா.அருண். திருச்சி -முதன்மைச் செயலாளர் கே.என்.நேரு, வி.பி.கலைராஜன், க.வைரமணி, பி.எம்.ஆனந்த், அ.அருண்குமார் கலந்து கொள்கின்றனர்.
புதுக்கோட்டையில் நடக்கும் பொதுக்கூட்டத்தில் திமுக துணை பொதுச்செயலாளர் கனிமொழி எம்.பி. கலந்து கொண்டு உரையாற்றுகிறார். இதில் குத்தாலம் அன்பழகன், கே.கே.செல்லபாண்டியன், துரை.தமிழ்ச்செல்வன், சா.சஸ் ரீனா பிர்தவுஸ் பங்கேற்கின்றனர். திருவொற்றியூரில் நடைபெறும் பொதுக்கூட்டத்தில் தமிழ்நாடு துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் கலந்து கொண்டு உரையாற்றுகிறார். இதில் மாதவரம் எஸ்.சுதர்சனம், எம்.எல்.ஏ., பி.கே.சேகர்பாபு, ஆர்.டி.சேகர் எம்.எல்.ஏ., அ.தா. டெக்சின் ரொமேரியா ஆகியோர் பங்கேற்கின்றனர். இதே போல சிங்காநல்லூர்- மாணவர் அணி செயலாளர் இரா.ராஜீவ்காந்தி, துரை.செந்தமிழ்ச்செல்வன், வி.ஜி.கோகுல், சி.கா.சுகன் மந்த்ரன். பூவிருந்தவல்லி – கவிஞர் மனுஷ்யபுத்திரன், சா.மு.நாசர், தாம்பரம் ஜின்னா, ஆஷிகா பர்வின் பங்கேற்கின்றனர் என திமுக மாணவர் அணிச் செயலாளர் ராஜீவ்காந்தி தெரிவித்துள்ளார்.
