இந்தூர்: இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள நியூசிலாந்து கிரிக்கெட் அணி 3 ஒரு நாள் போட்டி கொண்ட தொடரில் விளையாடி வருகிறது. முதல் போட்டியில் இந்திய அணியும், 2வது போட்டியில் நியூசிலாந்து அணியும் வெற்றி பெற்றதால் தொடர் 1-1 என்ற சமநிலையில் உள்ளது. இதனால் தொடரை வெல்ல போவது யார் என்பதை நிர்ணயிக்கும் 3வது ஒரு நாள் போட்டி இந்தூரில் நாளை நடக்கிறது.
இந்தியாவை பொறுத்தவரை ரோகித்தை தவிர கோலி, கில், ராகுல், ஸ்ரேயஸ் அய்யர் நல்ல பார்மில் உள்ளனர். பவுலிங்கிலும் சிராஜ், ராணா, குல்தீப், பிரசித் கிருஷ்ணா ஆகியோர் தங்களது பங்களிப்பை அளித்து வருகின்றனர். நியூசிலாந்தை பொறுத்தவரை பேட்டிங்கில் டேரில் மிட்செல், கான்வே, நிக்கோலஸ், வில் யங், பிலிப்சும் நல்ல பார்மில் உள்ளனர். பவுலிங்கில் கைல் ஜேமிசன், கிறிஸ்டியன் கிளார்க் விக்கெட் டேக்கராக உள்ளனர். இரு அணி வீரர்களும் பலம் நிரம்பி இருப்பதால் நாளை நடக்கும் போட்டியில் விறுவிறுப்புக்கு பஞ்சம் இருக்காது.
