- இந்திய ஓபன் பேட்மிண்டன் சாட்விக்
- சிராக்
- அர்ஜுன்-ஹரிகரன்
- புது தில்லி
- இந்தியா ஓப்பன் பேட்மிண்டன்
- இந்திய ஓபன் சர்வதேச பூப்பந்து போட்டி
- இந்திரா காந்தி உள்விளையாட்டு அரங்கம்
- டெல்லி…
புதுடெல்லி: இந்திய ஓபன் பேட்மிண்டர் போட்டியில், ஆண்கள் இரட்டையரில் சாத்வித்-சிராக் ஜோடியும், அர்ஜூன்-ஹரிகரன் ஜோடியும் இரண்டாம் சுற்றில் தோல்வியடைந்து வெளியேறியது. இந்திய ஓபன் சர்வதேச பேட்மிண்டன் போட்டி தொடர், கடந்த 13ம் தேதி டெல்லியில் உள்ள இந்திராகாந்தி உள்விளையாட்டு அரங்கில் தொடங்கியது. வரும் 18ம் தேதி வரை ஆண்கள் ஒற்றையர், பெண்கள் ஒற்றையர், ஆண்கள் இரட்டையர், பெண்கள் இரட்டையர், கலப்பு இரட்டையர் போட்டிகள் நடக்கிறது.
இந்த போட்டியில் முன்னணி வீரர், வீராங்கனைகள் கலந்து கொண்டுள்ளனர். ஆண்கள் இரட்டையர் பிரிவின் 2வது சுற்றில் இந்தியாவின் சாத்விக்-சிராக் ஜோடி, ஜப்பானின் யமஷிதா-மிடோரிகவா ஜோடியுடன் மோதியது. இந்த ஆட்டத்தில் 27-25 என முதல் செட்டை இந்திய ஜோடி கைப்பற்றிய நிலையில், அடுத்த 2 செட்டை 21-23, 19-21 என இழந்து,
தோல்வியடைந்தது. இதன் மூலம், சாத்விக்-சிராக் ஜோடி, தொடரில் இருந்து வெளியேறியது. மற்றொரு 2வது சுற்று போட்டியில் களமிறங்கிய இந்திய ஜோடியான அர்ஜூன்-ஹரிகரன் அம்சகருணன் ஜோடி, சீனாவின் சி.வாங்க்-லியாங் ஜோடியிடம் 15-21, 15-21 என்ற செட் கணக்கில் தோல்வியடைந்து, தொடரில் இருந்து வெளியேறியது.
