×

டெல்லி போராட்டத்திற்கு ஆதரவாக தடையை மீறி பேரணி போலீசாருடன் விவசாயிகள் தள்ளுமுள்ளு

பெரம்பலூர்,ஜன.27: பெரம்பலூரில் தடையைமீறி வாகனப் பேரணி நடத்தியதால் போலீசாருக்கும், போராட்டக் குழுவினருக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டதால் பரபரப்பு நிலவியது. டெல்லியில் டிராக்டர் பேர ணி நடத்தும் விவசாயிகளுக்கு ஆதரவு தெரிவித்தும், 3 வேளாண் சட்டங்களை ரத்துசெய்ய வலியுறுத்தியும், பெரம்பலூர் பழைய நகராட்சி அலுவலகம் அருகே உள்ள மேற்கு வானொலி திடலில் தொடங்கிய பேரணிக்கு, அனைத்து விவசாயிகள் சங்க, அனைத்துத் தொழிற்சங்க, அனைத்துக் கட்சி போராட்ட ஒருங்கிணைப் புக்குழு தலைவர் செல்லதுரை தலைமை வகித்தார். பேரணியை போராட்ட ஒரு ங்கிணைப்புக் குழுவின் மாநில செயற்குழு உறுப் பினர் சாமிநடராஜன் கொடி யசைத்து தொடங்கி வைத்தார். பேரணியைத் தடுத்து நிறுத்த பெரம்பலூர் ஏடிஎஸ்பி கார்த்திகேயன், டிஎஸ்பிக்கள் (சட்டம்-ஒழுங்கு) சரவ ணன், பாலமுருகன், இன் ஸ்பெக்டர்கள் பால்ராஜ், கலா, ஜெயசித்ரா, சுகந்தி மற்றும் சப்.இன்ஸ்பெக்டர் கள் உள்ளிட்ட 100க்கும் மே ற்பட்ட போலீஸார் பேரிகா டு அமைத்து குவிக்கப்பட்டிருந்தனர்.

இப்பேரணியில் அரசி யல் கட்சிகளின் சார்பாக திமுக மாவட்டசெயலாளர் குன்னம் ராஜேந்திரன், மாவட்ட பொருளாளர் ரவிச்சந்திரன், ஒன்றியச் செய லாளர் அண்ணாதுரை, நகரச்செயலாளர் பிரபாகரன், லப்பைக் குடிகாடு நகரச் செயலாளர் ஜாகீர் உசேன், மாவட்ட விவசாய அணி அமைப்பாளர் தங்கராசு, இந்திய கம்யூனிஸ்ட் மாவ ட்ட செயலாளர் ஞானசேகரன், காங்கிரஸ் கட்சி மாநில நிர்வாகி சிவாஜி மூக்கன், மதிமுக மாநில நிர்வாகி துரைராஜ், விசிக மாநில நிர்வாகிகள், ஐஜேகே, தமுமுக, மனிதநேய ஜனநாயக கட்சியினர் பங்கேற்றனர். மேலும், தமிழக விவசாயிகள் சங்க மாநிலச் செயலாளர் ராஜாசிதம்பரம், கரும்பு விவசாயிகள் சங்க மாவட்ட தலைவர் சக்திவேல், செயலாளர் வரதராஜன், பாமாயில் சாகுபடியாளர் கள் சங்கத் தலைவர் முருகேசன், ராஜீவ் விவசாயிகள் பேரவைத் தலைவர் வரதராஜன், பாட்டாளி விவசாயிகள் சங்கத் தலை வர் சீனிவாசன் மற்றும் தொழிற் சங்கத்தினர் கலந்து கொண்டனர்.

பேரணி பழைய பத்தாண்டு அம்பேத்கர் சிலை வரை வேகமாகச் சென்றது. அத னை ஆயுதப்படை போலீ சார் ரோப் கயிறு கொண்டு தடுத்து நிறுத்தினர் அப்போது தேசிய கொடி ஏந்திய அனைத்து விவசாயிகள் சங்க பிரதிநிதிகள் தொழிற்சங்க நிர்வாகிகள் அரசியல் கட்சி பிரதிநிதி கள் தடையைமீறிச் சென்ற போது, போலீசாருக்கும், போராட்டக் குழுவினருக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. சுமார் அரை மணிநேரம் விடாமல் தொட ர்ந்துநடந்த போராட்டத்தின் முடிவில் அனைவரும் கலைந்து மாற்று வழிகளில் புது பஸ்டாண்டுக்கு சென்றனர். அங்கு நகராட்சி அலுவல கம் முன்பு சாலையோரம் போராட்டக்குழு சார்பாக திமுக மாவட்டசெயலாளர் குன்னம் ராஜேந்திரன் தேசியக் கொடியை ஏற்றி வைத்தார். பின்னர் அனை வரும் வேளாண் சட்டங்க ளை ரத்து செய்து, டெல்லி போராட்டம் முடியும்வரை போராட்டத்தைதொடர்வது, போராட்டம் குறித்து மக்க ளிடம் விழிப்புணர்வு ஏற்ப டுத்துவது என உறுதிமொழி ஏற்றனர்.

Tags : protest ,Delhi ,
× RELATED வாக்காளர் பட்டியலில் இருந்து பெயர்...