நீதிமன்றம்,தாலுகா அலுவலகத்தில் குடியரசுதின விழா உற்சாகம்

கமுதி, ஜன.27: கமுதி மற்றும் திருவாடானை வட்டாரத்தில் உள்ள பள்ளிகள் அரசு அலுவலகங்கள் மற்றும் பல்வேறு பகுதிகளில் நேற்று 72வது குடியரசு தின விழா கொண்டாடப்பட்டது. சத்திரிய நாடார் ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்ற குடியரசு தின விழாவில் அம்பலகாரர் சக்திவேல், பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் செயலாளர் ராஜேஷ் கண்ணா, மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் தலைவர் மாணிக்க சஞ்சீவி கலந்து கொண்டு தேசிய கொடியை ஏற்றினர். கௌரவ உயர்நிலைப்பள்ளி, கலாவிருத்தி மேல்நிலைப்பள்ளி மற்றும் பல்வேறு கிராமங்களில் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி மேல்நிலைப் பள்ளிகளில் குடியரசு தின விழா கொண்டாடப்பட்டது.

கமுதி ஊராட்சி ஒன்றிய அலுவலக வளாகத்தில் சேர்மன் தமிழ்ச்செல்வி போஸ் தேசியக் கொடியை ஏற்றி வைத்தார். கமுதி பேரூராட்சி அலுவலகத்தில் குடியரசு தின விழா கொண்டாடப்பட்டது. முதுகுளத்தூர் பேரூராட்சியில் செயல் அலுவலர் மாலதி தூய்மைப் பணியாளர்கள் மற்றும் பசுமை நண்பர்களுக்கு பரிசுப் பொருட்கள் வழங்கினார். திருவாடானை தாலுகா அலுவலகத்தில் தாசில்தார் மாதவன், டிஎஸ்பி அலுவலகத்தில் டிஎஸ்பி ராமகிருஷ்ணன், மாவட்ட நீதிமன்றத்தில் நீதிபதி பாலமுருகன், ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் ஒன்றிய தலைவர் முகம்மது முக்தார் தேசிய கொடி ஏற்றினார்.

Related Stories: