சென்னை: தமிழகத்தில் அண்மை காலமாக டெங்கு பாதிப்பு அதிகரித்துள்ளதாக சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது. நாள்தோறும் 50க்கும் மேற்பட்டோருக்கு பாதிப்பு உறுதி செய்யப்படுவதாகவும், சென்னையில் சராசரியாக 10க்கும் அதிகமானோருக்கு கண்டறியப்படுவதாகவும் கூறப்படுகிறது.
குறிப்பாக பள்ளி குழந்தைகளுக்கு டெங்கு அச்சுறுத்தலுடன், இன்ஃப்ளூயன்ஸா காய்ச்சல் பாதிப்புகள் அதிகரித்திருப்பதாக டாக்டர்கள் தெரிவித்துள்ளனர். மழை இல்லாத போதிலும் நோய் பரவல் அதிகரிப்பதை தொடர்ந்து மாநிலம் முழுவதும் கொசு ஒழிப்புப் பணிகளை தீவிரப்படுத்துமாறு சுகாதாரத் துறை அறிவுறுத்தியுள்ளது.
