சென்னை: தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை நேற்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: மறைந்த சொல்லின் செல்வர் ஈ.வெ.கி. சம்பத்தின் புதல்வரும், தமிழ்நாடு இளைஞர் காங்கிரஸ் முன்னாள் தலைவராகவும் இருந்த இனியன் சம்பத் காலமான செய்தியறிந்து மிகுந்த அதிர்ச்சியும், துயரமும் அடைந்தேன்.
தந்தையின் வழியில் காங்கிரஸ் இயக்கத்தில் தம்மை முழுமையாக அர்ப்பணித்துக் கொண்டு மிகச் சிறந்த சொற்பொழிவாளராக, செயல்திறன்மிக்க இளைஞராக பணியாற்றியவர்.பழகுவதற்கு இனிமையானவர், பண்பாளர். அவரது மறைவினால் வாடும் அவரது குடும்பத்தினருக்கும், நண்பர்களுக்கும் தமிழக காங்கிரஸ் சார்பில் ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
