கீழக்கரை,ஜன.10:ஏர்வாடி தர்ஹா மேற்கு வாயில் பகுதியில் உள்ள ஒரு மளிகை கடையில் மின் கசிவால் நேற்று அதிகாலை தீப்பிடித்தது. இதுகுறித்த தகவல்படி ஏர்வாடி மின்வாரிய நிலைய பணியாளர்கள் மளிகை கடையின் மின் இணைப்பை துண்டித்தனர். இது தொடர்பாக அப்பகுதி மக்கள் ஏர்வாடி தீயணைப்பு துறையினருக்கு தகவல் கொடுத்தனர். இதனடிப்படையில் தீயணைப்பு மீட்பு பணி நிலைய அலுவலர் அருள்ராஜ் தலைமையில் தீயணைப்பு வீரர்கள் அங்கு சென்று பற்றி எரிந்த தீயை துரிதமாக அணைத்தனர்.
