தர்மபுரி, ஜன.9: ஏரியூர் இன்ஸ்பெக்டர் சுரேஷ் மற்றும் போலீசார் நேற்று ரோந்து பணி மேற்கொண்டனர். ஏர்கோல்பட்டி பகுதியில் சிலர் காசு வைத்து சூதாடுவதாக வந்த தகவலை அடுத்து போலீசார் அப்பகுதிக்கு சென்றனர். அங்கு சூதாடிக்கொண்டிருந்த அப்பகுதியை சேர்ந்த செல்வம் (37), சதீஸ் (27), பாலு (58), குழந்தை கவுண்டர் (51), மாயக்கண்ணன் (48), கோவிந்தன் (60), முருகன் (53) உள்ளிட்ட 7 பேரை கைது செய்தனர். அவர்களிடமிருந்து ரூ.35,330 பறிமுதல் செய்யப்பட்டது.
