×

கூலி தொழிலாளி விஷம் குடித்து தற்கொலை

தர்மபுரி, ஜன.9: பாப்பாரப்பட்டி அருகே மாதேஅள்ளியை சேர்ந்தவர் இளங்கோ, கூலி தொழிலாளி. இவருக்கு மது அருந்தும் பழக்கம் உள்ளது. கடந்த ஒரு வாரமாக நெஞ்சுவலியால் அவதிப்பட்டு வந்துள்ளார். இந்நிலையில் நெஞ்சுவலி அதிகமான நிலையில் வீட்டில் விஷம் குடித்து மயங்கினார். அவரை உறவினர்கள் தர்மபுரி அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். அங்கு பரிசோதனை செய்த மருத்துவர்கள் அவர் இறந்துவிட்டதாக தெரிவித்தனர். இதுபற்றி பாப்பாரப்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

Tags : Dharmapuri ,Ilango ,Matheali ,Papparapatti ,
× RELATED அடிப்படை வசதிகள் செய்து தரும்படி சப்.கலெக்டரிடம் கோரிக்கை