×

ஒட்டன்சத்திரத்தில் வாகனம் மோதி மூதாட்டி பலி

ஒட்டன்சத்திரம், ஜன. 8: ஒட்டன்சத்திரம் அருகே இருளகுடும்பம்பட்டி பகுதியை சேர்ந்தவர் வஞ்சம்மாள் (67). இவர் சம்பவத்தன்று ஒட்டன்சத்திரம்- தாராபுரம் சாலை மின்வாரிய அலுவலகம் அருகே நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது, அந்த வழியாக பாண்டியராஜன் (42) என்பவர் ஓட்டி வந்த சரக்கு வாகனம் அவர் மீது மோதியது.

இதில் படுகாயமடைந்த வஞ்சம்மாள் சிகிச்சைக்காக ஒட்டன்சத்திரத்தில் தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டிருந்தார். அங்கு சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார். இதுகுறித்து ஒட்டன்சத்திரம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

 

Tags : Ottanastra ,Ottansatram ,DARLAMAPUMBATI ,OTTANSATHRAM ,Ottansatram-Tharapuram Road Electricity Office ,Pandiyarajan ,
× RELATED சத்துணவு மையங்களில் கலவை சாதம்...