×

வத்தலக்குண்டு அருகே விஷ வண்டு கடித்து தொழிலாளி பலி

வத்தலக்குண்டு, ஜன. 8: வத்தலக்குண்டு அருகே பழைய வத்தலக்குண்டு கலைஞர் காலனியை சேர்ந்தவர் முத்துப்பாண்டி (50). விவசாய கூலித்தொழிலாளி. இவர் சம்பவத்தன்று கோட்டைப்பட்டி சாலையில் உள்ள ஒரு தோட்டத்திற்கு வேலைக்கு சென்றார்.

அப்போது அங்கு அவரை விஷ வண்டு கடித்து விட்டது. இதில் மயங்கிய முத்துப்பாண்டியை அங்கிருந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக தேனி கானாவிலக்கு அரசு மருத்துவமனையில் சேர்த்தனர் அங்கு சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார். இதுகுறித்து வத்தலகுண்டு இன்ஸ்பெக்டர் கவுதம் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

 

Tags : Vattalakundu ,Muthupandi ,Vattalakundu Kalaignar Colony ,Kottapatti Road ,
× RELATED சத்துணவு மையங்களில் கலவை சாதம்...