நாசரேத், ஜன. 8: நாசரேத்தில் நடந்த உயிர் மீட்சிக்கூட்டத்தில் திரளானோர் பங்கேற்றனர். நாசரேத் அசெம்பிளி ஆப் காட் சபையில் புத்தாண்டு உயிர் மீட்சிக்கூட்டங்கள் 3 நாட்கள் நடந்தது. தூத்துக்குடி பிராந்திய ஏஜி சபைகளின் மேற்பார்வையாளரும், நாசரேத் ஏஜி சபையின் தலைமை போதகருமான சங்கை எட்வின் பிரபாகர் தலைமை வகித்து ஜெபித்து கூட்டத்தை தொடங்கி வைத்தார். ஊழியர் சங்கை டேவிட் மெர்வின் பாடல்களோடு ஆராதனை நடத்தினார். தூத்துக்குடி மவுண்ட் சர்ச் பாஸ்டர் கார்த்தி சி.கமாலியேல், சங்கை. ஜாண் சைலம் ஆகியோர் விடுதலை செய்தி அளித்தனர். இதில் நாசரேத், கடையனோடை, குளத்துக்குடியிருப்பு, மெஞ்ஞானபுரம், பிரகாசபுரம் மற்றும் சுற்றுவட்டார கிராம மக்கள் திரளானோர் கலந்து கொண்டனர்.
