மண்டபம், ஜன.8: மண்டபம் மற்றும் மண்டபத்தை சுற்றி உள்ள கிராம பகுதிகளில் நேற்று அதிகாலையில் திடீரென தூரல் மழை பெய்தது. இந்த மழையானது காலை 10 மணி வரை தொடர்ந்து பெய்தது. இதனால் மாணவர்கள் பள்ளிக்கூடத்துக்கு செல்ல அவதிப்பட்டனர். அதுபோல கட்டிட தொழிலாளிகள் உள்பட கூலித்தொழிலாளிகள் காலையில் வேலை கிடைக்குமா கிடைக்காத என அச்சத்தில் இருந்தனர். அதுபோல பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை நேற்று பாதிக்கப்பட்டது.
