×

பெட்டிசன் மேளாவில் 82 மனுக்கள் மீது தீர்வு

தர்மபுரி, ஜன.8: தர்மபுரி மாவட்ட காவல் துறை சார்பில், நேற்று நடந்த மக்கள் குறைதீர்க்கும் முகாமில், 82 மனுக்கள் மீது உடன் நடவடிக்கை எடுக்கப்பட்டது. தர்மபுரி மாவட்ட காவல்துறை சார்பில், மக்கள் குறைதீர்க்கும் முகாம் (பெட்டிஷன் மேளா) மாவட்ட எஸ்பி அலுவலக வளாகத்தில் நேற்று நடந்தது. பிரமாண்ட பந்தல் மற்றும் இருக்கைகள் அமைத்து 32 காவல்நிலையம் சார்பில், தனித்தனியாக புகார் மனுதார்களை நேரில் வரவழைத்து குறைகள் கேட்டு மனுக்கள் மீது விசாரிக்கப்பட்டது. ஏடிஎஸ்பி ஸ்ரீதரன், பொதுமக்களிடம் இருந்து மனுக்கள் பெற்று விசாரித்தார். முகாமில் பொதுமக்கள், போலீசார் கலந்து கொண்டனர். இம்முகாமில், 82 மனுக்கள் பெறப்பட்டு, உடனடியாக விசாரித்து தீர்வு காணப்பட்டது. நிலப்பிரச்னை, வழித்தட பிரச்னை, பணம் கொடுத்தல், வாங்கல் பிரச்னை, குடும்ப பிரச்னை, போலி ஆவணம் தயாரித்தல், மிரட்டல் உள்ளிட்ட பலவகையான மனுக்கள் மீது விசாரிக்கப்பட்டது. மேலும், புதியதாக 24 மனுக்கள் பெறப்பட்டன. இந்த மனுக்கள் மீது விசாரணை நடந்து வருகிறது.

Tags : Dharmapuri ,Dharmapuri District Police Department ,Dharmapuri District Police ,Petition Mela ,SP Office… ,
× RELATED அடிப்படை வசதிகள் செய்து தரும்படி சப்.கலெக்டரிடம் கோரிக்கை