×

சென்னையில் நடைபெறும் போராட்டத்திற்கு திருத்துறைப்பூண்டி வக்கீல்கள் சென்றனர்

திருத்துறைப்பூண்டி,ஜன.7: சென்னையில் இன்று (7ம்தேதி) நடைபெறும் போராட்டத்திற்கு திருத்துறைப்பூண்டி வக்கீல்கள் புறப்பட்டு சென்றனர். திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி வழக்கறிஞர் சங்கம் சார்பாக 40 வக்கீல்கள் சென்னை உயர் நீதிமன்ற முன்பு இன்று நடைபெறும் முற்றுகை போராட்டத்திற்கு வக்கீல்கள் புறப்பட்டு சென்றனர்.

திருத்துறைப்பூண்டி வழக்கறிஞர் சங்கம் சார்பாக 40 பேர் வழக்கறிஞர் சங்கம் தலைவர் அருள்செல்வன் தலைமையில் ஈபைலிங் ரத்து செய்ய கோரி இன்று (7ம் தேதி) காலை 11 மணி அளவில் நடைபெற உள்ள உயர்நீதிமன்ற முற்றுகைப் போராட்டத்தில் கலந்து கொள்வதற்காக புறப்பட்டு சென்றனர்.

 

Tags : Thiruthuraipoondi ,Chennai ,Thiruthuraipoondi Lawyers Association of Thiruvarur District ,Madras High Court ,Thiruthuraipoondi… ,
× RELATED சத்துணவு மையங்களில் கலவை சாதம்...