- சிவகங்கை
- சிவகங்கை
- சிவகங்கை அரசு மகளிர் உயர்நிலைப்பள்ளி
- மாவட்ட காவல்துறை,
- சமூக நீதி
- மனித உரிமைகள் பிரிவு
- மாவட்ட எஸ்.பி.
- Sivaprasad
சிவகங்கை, ஜன.7: சிவகங்கை அரசு பெண்கள் மேல்நிலை பள்ளியில் மாவட்ட காவல்துறை, சமூக நீதி மற்றும் மனித உரிமைகள் பிரிவு சார்பில் ஒன்றிணைவோம் சமத்துவம் காண்போம் விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. பேரணியை மாவட்ட எஸ்பி சிவப்பிரசாத் கொடி அசைத்து தொடங்கி வைத்தார். 800க்கும் மேற்பட்ட மாணவிகள் கலந்து கொண்டனர். இந்நிகழ்ச்சியில் ஏடிஎஸ்பிக்கள் சுகுமார், பிரான்சிஸ், டிஎபி கண்ணன், நடைபெற்ற விழாவில், சமூக நீதி மற்றும் மனித உரிமை பிரிவு புள்ளியியல் ஆய்வாளர் கண்ணதாசன், அரசு வழக்கறிஞர் துஷாந்த் பிரதீப்குமார், சிவகங்கை மாவட்ட ஆதிதிராவிடர் நல அலுவலர் முத்துலட்சுமி, மாவட்ட ஆதிதிராவிடர் நலக்குழு உறுப்பினர் பூமிநாதன், சமூக நீதி மற்றும் மனித உரிமைகள் பிரிவு சார்பு எஸ்ஐக்கள் சேகரன், சிஜோதிமணி, அறிவழகன் கலந்து கொண்டனர். மாய்ந்துவிடவில்லை மனித நேயம் என்ற தலைப்பில் மெகா ஓவியப் போட்டி நடைபெற்றது.
