×

பென்னாகரம் அருகே ஆறுமுகம் நினைவிடம் திறப்பு

பென்னாகரம், ஜன.26: பென்னாகரம் அருகே ஆறுமுகம் நினைவிடத்தை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் பாலகிருஷ்ணன் திறந்து வைத்தார். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தர்மபுரி மாவட்ட செயற்குழு உறுப்பினரும், தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்ட செயலாளருமான ஆறுமுகத்திற்கு, பென்னாகரம் அருகே ஒகேனக்கல் செல்லும் சாலையில் உள்ள மடம் கிராமத்தில், நினைவிடம் அமைக்கப்பட்டுள்ளது. இதன் திறப்பு விழா நேற்று நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு மாவட்ட செயற்குழு உறுப்பினர் இளம்பரிதி தலைமை தாங்கினார். மாநில செயற்குழு உறுப்பினர் குணசேகரன், மாவட்ட செயலாளர் குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாநில செயலாளர் பாலகிருஷ்ணன் கலந்து கொண்டு, நினைவிடத்தை திறந்து வைத்தார். விழாவில் மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள்  மாதன், மாரிமுத்து, சிசுபாலன், நாகராசன், மல்லையன், ராமச்சந்திரன், அர்ஜூனன், கிரைசாமேரி மற்றும் கட்சியினரும், ஜீவானந்தன், பூபேஷ், ஜோதி ஆறுமுகம் உள்ளிட்ட குடும்பத்தினர் கலந்து கொண்டனர்.

Tags : Arumugam Memorial Opening ,Pennagaram ,
× RELATED பென்னாகரம் பேருந்து நிலையம் திடீர் இடமாற்றம்