×

முதியவரை தாக்கிய 4 பேர் மீது வழக்கு அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு நின்றிருந்த

திருவண்ணாமலை, ஜன.26: திருவண்ணாமலை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக நின்றிருந்த முதியவரை தாக்கி மிரட்டல் விடுத்த 4 பேர் மீது போலீசார் வழக்குப்பந்திந்து விசாரிக்கின்றனர். திருவண்ணாமலை செங்கம் தாலுகா புதுப்பட்டு கிராமத்தை சேர்ந்தவர் பழனி(65), விவசாயி. இவருக்கும் அதே கிராமத்தை சேர்ந்த உறவினர்களான ஜெகன் உள்ளிட்டோருக்கும் முன்விரோதம் காரணமாக தகராறு ஏற்பட்டது. தகராறில் படுகாயம் அடைந்த பழனி, நேற்று முன்தினம் மாலை திருவண்ணாமலை அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு வந்தார். அங்குள்ள புறநோயாளிகள் பிரிவில் நின்றிருந்தார். அப்போது அங்கு வந்த ஜெகன் மற்றும் அவரது தம்பிகள் அருண், ஜீவா, உறவினர் சித்ராதேவி ஆகியோர், பழனியை சரமாரியாக தாக்கினர். பின்னர் ‘போலீசில் புகார் அளித்தால் கொலை செய்துவிடுவோம்’ என மிரட்டல் விடுத்தனர். மருத்துவமனை வளாகத்தில் நடந்த இந்த சம்பவத்தை கண்ட நோயாளிகள் கடும் அதிர்ச்சியடைந்தனர். இதுகுறித்து பழனி திருவண்ணாமலை கிழக்கு போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் ஜெகன் உள்ளிட்ட 4 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags : government hospital ,
× RELATED ஸ்ரீபெரும்புதூர் அருகே வாகன விபத்து...