- திராவித மாதிரி ஊராட்சி
- தமீன் அன்சாரி
- சென்னை
- மனிதநேய ஜனநாயக கட்சி
- தமிழ்நாடு காங்கிரஸ் குழு
- திமுகா கூட்டணி
சென்னை: திராவிட மாடல் அரசு சிறப்பாக செயல்படுவதாக மனிதநேய ஜனநாயக கட்சித் தலைவர் தமிமுன் அன்சாரி பாராட்டு தெரிவித்துள்ளார். தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகையை சந்தித்த பிறகு தமிமுன் அன்சாரி பேட்டி அளித்தார். அப்போது பேசிய அவர்,
திமுக கூட்டணியில் சலசலப்புகள் கூடாது
திமுக கூட்டணியில் வாக்குகள் சிதறக் கூடாது என்பதே எங்களது நிலைப்பாடு. திமுக கூட்டணி வலிமையாக இருக்க வேண்டியது அவசியம். கூட்டணியில் சலசலப்புகளை தவிர்க்க வேண்டும், அவ நம்பிக்கையை ஏற்படுத்தக் கூடாது.
கூட்டணியில் எண்ணிக்கை முக்கியமல்ல-தமிமுன் அன்சாரி
தமிழ்நாட்டு மக்களின் நம்பிக்கைக்குரிய கூட்டணியாக திமுக கூட்டணி இருக்கிறது. வரும் தேர்தல் என்பது வெறும் எண்ணிக்கைக்கான தேர்தல் அல்ல. கூட்டாட்சி தத்துவம், சமூக நீதியை நிலைநாட்டுவதுதான் முக்கியம் என தெரிவித்தார்.
