- தூத்துக்குடி
- சரக் 2வது தெரு
- சாயர்புரம் டவுன் பஞ்சாயத்து, தூத்துக்குடி மாவட்டம்
- ரோஸ்மேரி
- சாயர்புரம் சரக் 2வது தெரு
தூத்துக்குடி, ஜன. 6: தூத்துக்குடி மாவட்டம், சாயர்புரம் பேரூராட்சி, சாராக் 2வது தெரு மக்கள் ரோஸ்மேரி தலைமையில் கலெக்டர் அலுவலகம் வந்து அளித்த மனுவில் கூறியிருப்பதாவது: சாயர்புரம் சாராக் 2வது தெருவில் 60 குடும்பங்கள் வசித்து வருகிறோம். நாங்கள் பரம்பரை பரம்பரையாக நெசவு தொழில் செய்து வருகிறோம். எங்கள் தெரு ஏற்கனவே மேடாகவும், வீடுகள் அனைத்தும் பள்ளமாகவும் உள்ளன. மேலும் இருபுறமும் மரங்களும் அதிகமாக உள்ளன.இந்நிலையில் ஏற்கனவே மேடாக உள்ள தெருவை மேலும் மேடாக்கும் வகையில் சாலை அமைக்க சாயர்புரம் பேரூராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுத்து வருகிறது. இந்த சாலை வசதி எங்களுக்கு வேண்டாம். அதுபோல எங்கள் தெருவில் ஆர்ஓ குடிநீர் தொட்டி அமைக்கவும் திட்டமிடப்பட்டு உள்ளது. இதனால் எங்கள் தெரு மக்களுக்கு எந்த பயனும் இல்லை. ஏற்கனவே மேடாக உள்ள எங்கள் தெரு மேலும் மேடாகத்தான் வாய்ப்பு உள்ளது. எனவே எங்கள் தெருவிற்கு சாலை வசதி மற்றும் குடிநீர் தொட்டி எதுவும் வேண்டாம். இவ்வாறு மனுவில் கூறியுள்ளனர்.
